விஞ்ஞான விவசாயம்

பருத்தி ஆடை அணிந்து
பம்மாத்து நடை நடந்து
பரிகாசமாய் பேசவதல்ல விவசாயம்

விதையின் தரம் அறிந்து
விளைவிக்கும் நிலம் புரிந்து
விஞ்ஞான முறைச்செயலே விவசாயம்

விளைநிலத்தை உழவிட வேண்டும்
வேண்டிய அளவிற்கு எருவிட வேண்டும்
விதையின் முளைப்பறிந்து விதைக்க வேண்டும்

தகுந்தமுறையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
தழைக்கும் வரை காத்திருக்க வேண்டும்
தாயின் பரிவை மிகுந்து பார்த்தல் வேண்டும்

பயிர் வேரின் பிடிப்பறிய வேண்டும்
பகலவனின் வெம்மை அறிவேண்டும்
பலதிசை காற்றை அறிந்தே காக்க வேண்டும்

பூவின் தரம் புரிதல் வேண்டும்
புதிய நோய் தாக்குதல் தெரிய வேண்டும்
புயலில் அழிந்தாலும் புன்னகைக்க வேண்டும்

அனலின் மேல் வசிப்பதைப் போன்றது விவசாயம்
அளவிட முடியாத உழைப்பை உறிச்சுவது விவசாயம்
அன்னத்தினை உண்ண இயலாதவனே விவசாயி.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (28-Jan-21, 5:25 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : vignaana vivasaayam
பார்வை : 29

மேலே