வெற்றிக்கான போர்க்குதிரைகள்

தோல்விகளே வெற்றிக்கான படிகள்
என்பது பழைய ....மொழி
தோற்றுத் தோற்று பின் பின்னிப் பின்னி
வலை அமைத்து வெற்றி கண்ட சிலந்தி
ராபர்ட் ப்ரூஸுக்குப் பாடம்
தோற்றுத் தோற்று பதினெட்டாவது முறை
வெற்றி கண்ட கொள்ளை அடிக்க வந்த கஜினியும்
விடா முயற்சிக்குப் பள்ளிப் பாடம்
தோற்றாலும் துவண்டுவிடாத மன உறுதியும்
விடாது தொடரும் தொடர் போராட்டங்களும்தான்
வெற்றிக்கான போர்க்குதிரைகள் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jan-21, 10:22 am)
பார்வை : 76

மேலே