சாகுல் ஹமீது 25-Feb-2021

பயணங்களில் புத்தகங்களை
எடுத்துச் செல்வது என் வழக்கம்...
அன்பு நண்பன் சாகுல்
உடன் வருவதாயிருந்தால்
புத்தகங்களை என்னுடன் நான்
எடுத்துச் செல்வதில்லை...
ஒரு நூலகமே உடன்
வரும்போது புத்தகங்கள் எதற்கு...

அந்த நூலகமோ நல்ல
சிந்தனைகள் கொண்ட
அழகிய நந்தவனத்தை
தன்னோடு எடுத்து வரும்...

சாகுல் தன் எண்ணங்களால்...
செயல்களால்.. ஆண்டு முழுமையும்
பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம்...

சாகுல் வசந்தங்கள் உன்னோடு...
வானமும் வசப்படும்
இனிய பண்ணோடு...
வாழ்க பல்லாண்டு
வளங்கள் எல்லாம் பெற்று...
அருமை நண்பன் சாகுல்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
👍👏😃💐🙏🌺🌹🍫🎂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (3-Feb-21, 5:01 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 136

மேலே