காம மலைப்பாம்பு

அவன் மயக்கும் பார்வைக்கு மயங்கிய நான்
அவன் பிடியில் நானே மாட்டிக்கொள்ள என்
உள்மனது ஏதோ சொல்ல எப்படியோ அவன்
பிடியிலிருந்து விடுபட்டு ஓடினேன் எங்கே
போவதென்றும் தெரியாது ஒரு மலைப்பாம்பின்
வாயில் அகப்பட்டுக்கொண்ட மனிதன் விடுபட்டு
ஓடுவது போல ..... ஆம் அவன் பார்வையால்
இளம் பெண்களை மயக்கும் ஓர் மலைப்பாம்பு
காம மலைப்பாம்பு என்று தெரிந்து கொண்டேன்
இப்போது ..... பெருமூச்சு வாங்க

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (3-Feb-21, 8:04 pm)
பார்வை : 138

மேலே