காலம் நல்ல பொற்காலம்

ஆசிரியத்துறை பா
நோயை உண்டாக்கும் நுணுக்கத்தை கண்டனர் மனிதர்
ஆநிரை ஆடு நாய் கோழி பன்றியிலும் புகுத்தினரே
சிட்டு மைனா மயில் கொக்கு காடையுள்ளும் செலுத்தி
அந்திம ஆயுளை அவசரமாய் அழைத்தே வந்தனர் மகிழ்ந்து
முந்தின பிறப்புப் பாவம் இப்பவும் உள்ளதென்பதை
முழுதாய் அழித்து இப்பிறப்பில் செய்த பாவத்தையும்
அபகரித்து ஏமாற்றி உய்ய நினைப் போரின் உடலில்
நோய் கொண்டு தீராமல் நொந்து சாக வழியாக்கினர்
மருந்திலே நஞ்சைக் கொடுத்து வஞ்சகமாய் ஏமாற்றி
மழலையாகி கிழவி வரையில் யாவருக்கும் ஆசைமூட்டி
மலக்குடல் முதல் தொண்டை முடிய பெரும் புண்ணாக்கி
மாற்று மருந்திடா நிலையில் உயிர்ச்சேதம் பற்பல செய்தனர்
ஒன்பது வாசலும் ஓய்வில்லா துன்பம் பெறுகின்ற
ஒப்பற்ற கீழ்ச்செயல்களால் உற்பத்தி செய்யவே
ஓங்கி உலகாளும் உயர்ந்த நாடுகளின் ஒப்புதலோடு
ஒருவரை ஒருவர் விஞ்சவே நஞ்சால் உணவிட்டனரே
மதியோடு கதிர்வெள்ளி சனிசெவ்வாய் புதன் ஞானம்
முதலியன ஒளியிலும் விடமாக்கும் பணிவரலாம்
மூக்குவாய் பூட்டிய நாம் வருந்நூற்றாண்டில் மெய்மூடி
உயிர்வாழ பணத்தாசை பேய்களால் நிலைவரும் கவனம்
------- நன்னாடன்.