நிலவும் அவளும்

வசந்த கால இரவு நீலவானில் உலவி
வந்த நிலவு தடாகத்து பளிங்கு
நீரில் தனது அழகைப் பார்த்து
ரசிக்க தண்ணீரில் கொஞ்சம் சலசலப்பு.......
யாரோ கல்லில் பட்டுவந்த கூழாங்கல்
நீரில் பட்டதோ..... அதோ நீரின் விளிம்பில்
ஒர்க்கன்னி தடாகத்தைப் பார்க்க நிலவு
அவள்முகத்தைப் பார்த்ததோ.... அவள் அழகை .......
வெட்கியதோ.... பின் ஏன் மேகத்தின் பின்னே
சென்று மறைந்தது நிலவு!
நிலவின் ஒளியையும் மிஞ்சியதோ அவள்
முகத்தின் பேர் எழில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Feb-21, 1:35 pm)
Tanglish : nilavum avalum
பார்வை : 314

மேலே