56 இலியிச்

பார்வதியின் வீட்டில்தான் நளினியும் இருந்தாள். அவள் கைகளில் ஒரு நீல நிற பைல். அதில் நிறைய பழுப்பு நிற காகிதங்கள் இருந்தன.

இவைதான் ஒருவேளை இலியிச் எழுதிய நாவலாக இருக்குமா என்ற எண்ணம் எனக்கு.

பேராசிரியர் என்னிடம் பேசலானார்.

இலியிச் ஆரவல்லி மலைத்தொடர் சார்ந்த ஒரு கிராமத்தில் இருக்கும் போது அந்த நாவலுக்கான முயற்சி நிகழ்ந்து உள்ளது. அவன் அதை முழுமையாக எழுதினானா அல்லது வெறும் குறிப்புகளாக மட்டும் அவன் எழுதி வைத்திருக்கிறானா என்பது இப்போது முற்றாக தெரியாது என்றும் நீங்கள் அங்கு பயணப்பட்டால் குஜராத் எல்லையில் இருந்து அக்கிராமத்துக்கு செல்லலாம் என்றும் கூறினார்.

எனில், இந்த கடினமான பணி மற்றும் பயணத்துக்கு நளினி தேவையா என்ற கேள்வியும் கேட்டேன்.

நளினியோ, நான் நிச்சயம் அங்கே வருவேன் என்றதும் வேறு மறுப்பு பேச்சின்றி போனது.

இலியிச் எப்படி அங்கு சென்றான் என்பது எனக்கு குழப்பமாக இருந்தது.

நளினி இப்போது அந்த நீல நிற பைலை என்னிடம் கொடுத்தாள்.

பிலோ இருதயநாத் எழுதிய சில புத்தகங்களில் இருந்து சிற்சில பத்திகளை மேற்கோள் காட்டி அவன் கையில் எழுதிய பிரதிகள் அவை.

இப்போது எனக்கு புரிந்து கொள்ள முடிந்தது.

இலியிச் ஆதிவாசிகளை நோக்கி சென்றிருக்கிறான். அவன் அந்த பயணம் பற்றி அதில் துல்லியமாக குறிக்கவில்லை என்றால் அது தொடர்மலை சார்ந்த பகுதிகள் என்பதால் கூட இருக்கலாம் என்று தோன்றியது.

எந்த காலக்கட்டத்தில் இலியிச் அங்கே சென்றிருக்கக்கூடும் என்பதை பார்வதி ஓரளவு அனுமானித்தாள். அது அவன் தற்கொலை முயற்சிக்கு பிந்தைய காலத்தில் இருக்கலாம் என்பதுதான் பொருந்தி வந்தது.

குஜராத்துக்கு நானும் நளினியும் சென்றோம்.


______________==========____________========

இன்னும்.....

=========================

எழுதியவர் : ஸ்பரிசன் (9-Feb-21, 10:55 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 22

மேலே