எப்போது காதலியே

மெத்தையோடு கட்டில்
காத்திருக்க கண்மனியே
கட்டியணைக்க கரமும் துடித்திருக்க
அறையெங்கும் விளக்கொளி
அணைந்து இடம் ஒதுக்க
அங்கமெல்லாம் சிலித்தவாறு
நான் காத்திருக்க உன் பொன்னுடல்
மேனி என் உடல் சேர்வது எப்போ....!

ராத்திரி தூக்கம் போச்சு
ராத்திரியானால் சூடாகிறது மூச்சு
ராசாத்தி காத்திருக்கேன் -நான்
காதோடு ரகசியம் உரைக்க
கார் வண்ணக் கூந்தல் கோதி
நேர் நெற்றியிலே முத்தமிட்டு
நேரம் ஆக ஆக நெருக்கத்தை
அதிகரித்து உறக்கத்தை துரத்தி
சரசத்தை வரவேற்பது எப்போ ...!

கள்ளி உன் இடை அமர்ந்த
மெல்லிய உடை களைத்து
என்னைத் தொட்ட மோகத்தை
விடையாக உனக்களித்து
பகடக்காய் போல் பவளக்கொடி
உனை உருட்டி பல வித்தை
நான் புகட்டி இதழ் வழியே
மது ரசம் ஊட்டி காமப் புதையல்
நாம் தோண்டி சாமக் கோழி கூவும்
வரை விழித்திருப்பது எப்போ ...!

அங்கமெல்லாம் வியர்வைத்
துளி தேங்கிக் கிடக்க
அதிர்வு அற்ற மெத்தையிலே
அசைவற்று நீ கிடக்க
நாம் கூடும் வேளையிலே
நீ சூடிய மல்லிகை எல்லாம்
நாணம் கொண்டு உதிர்ந்து கிடக்க....!

உன் நெற்றிக் குங்குமம் என்
கன்னத்திலே கோலம் கிறுக்கி இருக்க
மோகம் மறைந்து மேகமாய் அன்பு
எனை அழைக்கும் வேளையிலே
அள்ளி உன்னை நான் எடுக்க
வெட்கம் கொண்டு காதலியே
பூ முகம் நீ மறைக்கும் காலம்
நேரம் கனிந்து வருவது எப்போ எப்போ ....!



(கவிதை கற்பனையே அவசியம்
இல்லாத கருத்திடுவோருக்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது )😊

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (10-Feb-21, 7:55 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : eppothu kathaliye
பார்வை : 338

மேலே