சிந்தனைக் கவிதைகள்

☑️🔘☑️🔘☑️🔘☑️🔘☑️🔘☑️

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

☑️🔘☑️🔘☑️🔘☑️🔘☑️🔘☑️

இயக்குனர்களே!
நடிகைகளை
படப்பிடிப்புக்கு
வரும்போது
வீட்டிலேயே
குளித்து விட்டு
வரச் சொல்லுங்கள்...
படத்தில் வந்து 'குளிப்பதால்'
ரசிகர்களின் மனம்
'அழுக்காகிறது'

✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️

தற்போதுள்ள
தாய்க்குலங்கள்
பணம் போனாலும்
பரவாயில்லை என்று
குழந்தைகளுக்கு
படி கணக்கில்
பால் வாங்கி ஊத்துகின்றனர்
தன் அழகு
போய்விடுமோ என்று
தாய்ப்பாலை நிறுத்திவிட்டு....!

✖️✖️✖️✖️✖️✖️✖️✖️✖️✖️✖️

அன்று
"ஆண் பிள்ளை" என்பதை
"புலியை பிடித்து" நிரூபித்தனர்...
இன்றும்
நிரூபிக்கின்றன
"புகை பிடித்து...."

✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️

"இரட்டை கிளாஸ்" முறையை வைத்திருக்கும்
டீக்கடைக்காரனே!
ஏன்
ஒன்றாக வைத்திருக்கிறாய்
"காசு போடும்
பெட்டியை மட்டும்..?"

✖️✖️✖️✖️✖️✖️✖️✖️✖️✖️✖️

யானை
காட்டில்
இருக்கும் வரை....
"மதம்"
பிடிக்காமல் தான் இருந்தது...!

*கவிதை ரசிகன்*

☑️🔘☑️🔘☑️🔘☑️🔘☑️🔘☑️

எழுதியவர் : கவிதை ரசிகன் (10-Feb-21, 9:11 pm)
பார்வை : 39

மேலே