57 இலியிச்

நான் டோலா பானர்ஜியை போனில் அழைத்து முழு விவரங்களையும் அவருக்கு தெரிவித்தேன்.

அவர், ஒரு பயண வழிகாட்டியை எனக்கு அனுப்பி வைப்பதாகவும் அவருக்கு தமிழும் தெரியும் என்பதால் சுலபமாக இருக்கும் என்றார்.

ஆனால் நீண்ட நாட்கள் அவர் உங்களோடு தங்கி இருக்க மாட்டார் என்பதால் வெகு விரைவில் உங்கள் வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

அது எனக்கு சரியாக வரும் என்று தோன்றவில்லை என்றாலும் நான் அதை அக்கணம் ஏற்றுக்கொண்டேன்.

தரை மார்க்கமான நீண்ட பயணம் மூலம் நாங்கள் சமலாஜிக்கு வந்தோம். பின்னர் டோலா அனுப்பிய எங்கள் வழிகாட்டி எங்களோடு இணைந்தார்.

அவர் பெயர் லிப்னி.

தமிழ் மிகவும் கொச்சையாக பேசினார். அவர் மங்களூர் சுற்றுலா மார்க்கத்தில் பயணிகளுக்கு ஒரு வழிகாட்டியாக சற்று காலம் இருந்து இருக்கிறார்.

நாங்கள் ஒரு நாவலை தேடிச்சென்று கொண்டிருக்கிறோம் என்று அவரிடம் கூறினேன். அது முதல் மிகுந்த மரியாதையுடன் அவர் எங்களிடம் பேசியது வியப்பை கொடுத்தது.

அங்கிருக்கும் பல ஆதிவாசிகள் இப்போது அங்கே இல்லை என்றும் நகரமயமாக்கல் மேலும் பல்வேறு தாக்கங்களை உருவாக்கி இருக்கிறது என்று வருத்தப்பட்டார்.

நாங்கள் நடக்க துவங்கினோம்.

இலியிச் என்ன நோக்கத்திற்காக இங்கே வந்திருப்பான். என்ன எழுதி இருக்கக்கூடும் என்று சிந்தனையில் மனம் தவித்தது.

சில மைல்கள் நடந்து கடந்தாலும் நளினி சோர்வு கொள்ளவில்லை. எதிரில் சிலர் கடந்து போகும்போது லிப்னி அவர்களிடம் நின்று நீண்ட நேரம் பேசி விசாரித்தார். பலன் ஒன்றும் இல்லை.

இந்த பயணம் என்னவாகும் என்ற கவலை எனக்கும் வந்தது. கூடவே நளினிக்கும் வந்தது. மௌனமாக ஒருவரையொருவர் பார்த்து விட்டு காட்டுப்பகுதியை ஊடுருவி இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தோம்.

அது கடும் வெயில் கொண்ட ஆழ்ந்த மதியநேரம்..


=============================
வரும்......

____________________________

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Feb-21, 4:18 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 25

மேலே