முடிவாய் முடிக்கப்பட்டவைகள்

எண்ணற்ற திட்டங்கள் சுதந்திர இந்தியாவில்
கழிப்பிடங்கள் பல வடிவில் கட்டுவது முதல்
கண்டம் தாண்டும் ஏவுகணை செய்வது வரை
கொத்து கொத்தாய் பணங்கள் அவைகளுக்கு ஒதுக்கி
முடிவாய் முடிக்கப்பட்டவைகள் முடங்கிய நிலையிலே
திட்ட செயல்பாடுபற்றி சிந்தனைக் கொள்ளா அரசுகள்
மாற்றுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி மாற்று அரசுகளால்
மனம் மகிழ்ச்சியோடு மளமளவென்ற செயல்பாடுகள்
பணங்கள் மட்டுமே பாழடைந்தே திட்டங்கள் திறமின்றி
மக்களின் அறிவும் சொர்ணையும் அவிந்த நிலையில்
யாருக்காக உருவாக்கப்படுகிறதோ அவர்களே
தற்குறியாய் தள்ளாடும்போது திருடர்களுக்கு மகிழ்வே
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Feb-21, 9:35 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 56

மேலே