மழைக்கால நிலவு
தென்றல் காற்றும் கவிதை எழுத்தும்
உன் அழகை பார்த்து !
விண்மீன் கூட்டம் கண் சிமிட்ட
வெட்கத்தில் முகம் மறைத்தாய்
கார்மேகம் கைக்கோர்த்து !
கார்காலம் வேண்டுமா என்ன
கவிஞன் உன் மேல் காதல் கொள்ள...
உன்னை புகழ்ந்து படாதவன்
கவிஞனும் அல்ல...
கடல் அலையும் உன்னை பிரிந்து
கண்ணீர் மழை பொழிந்ததடி !
வாடை காற்றும் உன்னைத் தேடி
வயல்வெளியில் அலையுதடி !
மலர் வனமும் உன்னை நினைத்து
மௌனத்தில் உருகுதடி !
வெள்ளி நிறமுடைய காரிகையே
வேண்டாமே, உனக்கு இந்த மறைமுகம்
ஒருமுறை கட்டிவிடு உன் திருமுகத்தை
என் உயிர் பிரிந்தாலும் தேடி
வந்தடைவேன் உன்னிடத்தில்... காதலியே !
மின்னல்கீற்று உனை கண்டு
மிதமான காற்றாய் மறுதடி !
இடிஇடிக்கும் ஓசையும் நீ
அங்கு இருப்பதினால் இன்னிசையாய் கேட்குதடி !
என் மேல் விழும்
ஒவ்வொரு மழைத்துளியும் உன்
காதலை மேலும் கூட்டுதடி !
மொட்டு அவிழ்தா மலருக்குள்
உன் முகம் மறைத்தாய் !
வெண்ணிற முத்துக்குள் நீ ஒய்வெடுத்தாய்!
என்னவளே கார்காலம் உனக்கு விடுமுறையா !
இந்த கவிஞனுக்கு மட்டும் கண்ணீர் கடலா !