கண்கள் சிதைந்திட

துள்ளி விளையாடும் அழகுத் தங்கைகளே
தோழமைப் போற்றும் அன்புத் தம்பிகளே
அழகாய் இருந்த ஆறுகளும் இல்லை
அதனுள் ஓடிய தெளிந்த நீரும் இல்லை

எங்கும் துகளாய் கண்ணாடி சிதறலாச்சு
எல்லா நீர் நிலையும் கழிவு ஓடையாச்சு
பஞ்சம் தோன்ற பெரிய பாதையை வகுத்தோம்
பார்க்கும் இயற்கை எல்லாம் பாழ்பட சிதைத்தோம்

கதிருக்கே வியர்த்திட கரியமில வாயுவை வைத்தோம்
கதிரிலே நஞ்சை புகுத்தி உணவாய் படைத்தோம்
கண்கள் சிதைந்திட அறிவியலால் படிப்பு வைத்தோம்
கருத்தில்லா திரைப்படத்தால் குதுகலம் அடைந்தோம்

போதையை வெகுவாய் புசித்து மகிழ்ச்சி அடைந்தோம்
பொழுது விடியும் போதே புலாலை உண்டு களித்தோம்
பொறுப்பு உள்ளோர் நாம் என்பதை மறந்தே விட்டோம்
பொலிவிழந்து மனிதமழிவதை பதறாமல் கண்டோம்

எத்தகைய அறிவுரையையும் ஏளனமாய் பார்த்தோம்
எல்லா நிகழ்வையும் ஏளனமாய் எடுத்துக் கொண்டோம்
எலும்பு சிதைக்கும் நோயுண்டாகும் காலம் வரும்
எவறும் உதாவயியலா நிலையே உண்டாகும்

காற்றையே சுவாசிக்க முடியாத நிலையும் வருமே
கதிரொளி படும் இடங்கள் எங்கும் நெருப்பால் எரியுமே
நீரும் நிலத்தினுள் பல்லாயிரம் அடியுள் மறையுமே
நீட்சியாய் ஓருயிர் தாவரங்களே புவியில் வாழுமே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (16-Feb-21, 9:46 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 43

மேலே