கற்பகத்தரு

உன் நிழலில் கூட நிற்க முடியா
தனித் திமிர் கொண்டுதான்
மனிதன் அண்ணார்ந்து பார்த்து
மகிழ்ந்திடும் அளவில்
உயர்ந்துதான் நிற்கிறாய் ,
உன்னிடத்தில் உள்ள சிறப்புகள்
எதனிடத்தில்
நீரூற்றவில்லை மனிதன்
நிலத்தில் பசளை இட்டதில்லை
பனையென்ற முறுக்கோடு
பார்போற்ற பயன் கொடுத்து
உயர்ந்துதான் நிற்கின்றாய் ,
இதனால்தானோ
பாவலனும் பாட்டெழுதி உன்னை
கற்பகத்தரு என்று
பெயரும் சூட்டி விட்டான்
,

எழுதியவர் : பாத்திமாமலர் (16-Feb-21, 5:34 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 51

மேலே