கண்ணீர் பெண்ணின் கண்ணீர்

இவள் கண்ணீர் ஆனந்த கண்ணீர்
இவள் அன்புத் தாய்
இவள் கண்ணீர் இன்பம் ததும்பும் கண்ணீர்
இவள் அவன் காதலி
இவள் கண்ணீர் நீலிக் கண்ணீர்
இவள் நிஜ வாழ்வில் ஒரு 'வில்லி'
இவள் கண்ணீர் சோகக் கண்ணீர்
அவன் இல்லாது தனிமையில் வாடும்
இவள் தனிமையில் வாடும் காதலி

கண் ஒன்றே.....
அப்பப்பா.... பெண்ணின் கண்ணீர்

பெண்ணின் கண்களிலிருந்து வரும்போது
என்னென்ன ரூபம் எடுக்கிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Feb-21, 7:53 pm)
பார்வை : 86

மேலே