காதல் மனைவி இறந்தாள்

காதல் மனைவி இறந்தாள்

நேரிசை வெண்பாக்கள்

பெரியசைப் பார்த்தோர் இறந்திடுச்சி யாரு
பெரிசையடக் கஞ்செய் வதென்றார் -- பெரிசை
உடனேய டக்கம்செய் யுங்களென்றார் நானும்
கடனே யெனவதைப்பார்த் தேன். 1


பெரிசுக்கு மூச்சு வெளியேறிப் போக
பெரிசு இறந்ததுயின் றேதான் -- பெரிசுபற்றி
அப்படிநான் நம்பவில்லை காரணம் ஒன்றல்ல
தப்பா பலதுண்டுக் கேளு. 2

பெரிசின் மனைவி இருபதாண்டு முன்னம்
அரிதாய் இறந்துபோனார் பாவம் -- பெரிசை
கரிசனமாய் உண்ணவழைக் காமறந்த அன்றே
தரிசாகி போனார் இறந்து. 3

அவரிறந்து ஆன திருபது ஆண்டு
எவருமறி யாரிதை கேளும் --- அவலம்
அவரிறந்து ஆன திருபது ஆண்டு
எவரும் கவனியாப்போ னார். 4

மகனுடைய பொல்லா மனையாள் பெரிசை
அகம்பாவ மாய்கேட்டாள் யேனோ -- அகம்படையாள்
போனபின் சாகா சனியனிது என்றதும்
போனது அன்றே உயிர். 5

ஏன்தான் அவரன்றே செத்ததை யாருமே
யேன்றாது விட்டார் தெரியாது --- சான்றதாய்க்குப்
பின்தார மும்போன பின்வீட்டின் ஓரமாம்
என்னக் கொடுமை யிது. 6

அன்றே அவர்செத் திருந்தார் நடைபிணமாய்
இன்றுவரை யேன்கவனித் தாரில்லை ,-- இன்றென்ன
காசிங்கேக் காய்க்குதா பிள்ளை அமிலவார்த்தை
வீசியவன் றேயே துயிர். 7

கிழத்தை தொலைமுதியோர் இல்லம் விடுங்கள்
இழவுவேண்டாம் காதுபடக் பேசல் --. தழலின்
பிணமாய் கவனிக்கா விட்டவன்றே செத்தார்
அணலிருக்கி உண்மை யிது. 8

(அணலிருக்கி --- கழுத்திருக்கி)

பொண்டாட்டி யில்லா உனக்கேது தொல்லையுடன்
திண்டாட்டம் வாழ்த்தலில்லைக் கேலியே -- அண்டையினர்
அஞ்சாத பேச்சுக்கேட் டன்றே மனதளவில்
துஞ்சியவ னைக்கவனி யாரு. 9

பத்துமுறை செத்த பெரிசுயின்று சாகவில்லை
அத்தனைநான் கண்டவன் சொல்வேனா -- வித்தகரின்
முத்துவார்த்தை முன்னே யவன்செத்து விட்டானே
பத்து முறையுண்மைச் சாவு. 10


வழிநெடுக முண்டாமிச் சாவும் விசாரி
பழியேன் நடைபிணம் சாக -- தழீஞ்சி
பலருளார் முந்நீத்துப் பின்னுயிர் விட்டார்
கலங்கி யழுதுள்ளேக் கேள். ௧௧


...........

எழுதியவர் : பழனிராஜன் (19-Feb-21, 10:51 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 171

மேலே