நிர்வாணமாய் திரிபவன்

கற்பனை தான் எல்லாவகை ஆன்மீக காவியங்களும்
ஈடேற்ற இயலா பலவகை அரியச்செயல்கள்
இப்புவியில் நிகழ்ந்ததாய் திரிபான பல கதைகள்
அடிப்பட்டு இறந்தவர்களுக்கு ஆயுள் திரும்பியதாய்
புறப்பட்ட அம்புகள் மீள கரங்களுக்கு வந்ததாய்
கருவுற்ற மூன்று நாட்களில் மழலைப் பிறந்ததாய்
காற்றிலும் நெருப்பிலும் ஆயுதம் பூண்டு தோன்றியதாய்
ஒளிப்பிரகாசத்தால் எழுத்தறிவு சிறப்புற பெற்றதாய்
சிலவகை வார்த்தைகளே போரையே நிறுத்தியதாய்
மிருகங்களும் பறவைகளும் போர் பல புரிந்ததாய்
கல்லும் மண்ணும் மலையும் உயிர்பெற்று நின்றதாய்
சின்னஞ்சிறு உரு திடுமென வான்வுயர வளர்ந்ததாய்
இறக்கை உடைய தேவதை வானிலிருந்து வந்ததாய்
ஆணும் ஆணுஞ்சேர்ந்ததால் குழந்தை பிறந்ததாய்
ஆடு மேய்த்தவன் அதிசயத்தக்க அறிவு பெற்றதாய்

படிப்பறிவே இல்லாதவன் அரிய ஆற்றல் பெற்றதாய்

அப்பன் போக்கிரியாய் குழந்தை தெய்வநிலையாய்

இவ்வாறான பல முரண்பாடுகள் என்றாலுமே - இவை

எல்லோராலும் போற்றக்கூடிய இறைக்கதைகளாம்.

எழுதியவர் : நன்னாடன் (19-Feb-21, 5:57 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 26

மேலே