அவள் சிரிப்பு

முற்றத்தின் கொடியில் தெறித்த முத்துக்களாய்
ஏற்றமாய்ப் பூத்து குலுங்கிய முல்லைப்பூக்கள்,
சற்றைக்கெல்லாம் அங்கு வந்து சேர்ந்தாள்
சிக்கென சிற்றிடையாள் அவள் கொஞ்சம்
செவ்வாய்த் திறந்து சிரிக்க, ஏனோ
பூத்த முல்லைப்பூக்களில் வாட்டம் தெரிந்தது;
புரிந்தது பின்னே முத்து தெறிக்கும்
இவள் சிரிப்பில் தன் சிரிப்பு சோடைபோனதே
என்று பாவம் முல்லை நினைத்ததோ
முல்லைச் சரத்தையும் விஞ்சிய சிரிப்பு
என்காதலியின் வண்ண சிரிப்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Feb-21, 11:43 am)
Tanglish : aval sirippu
பார்வை : 363

மேலே