என்னை சேத்துக்கவீங்களா முடியாதா

என்னை சேத்துக்கவீங்களா? முடியாதா?
*******************************************************************
ஒரு கட்சியின் தலமை அலுவலகம். தலைவர் உள்ளே இருக்கிறார். திடீரென்று ஒருவன் பாதுகாவரைத் தள்ளிவிட்டு நேரமாகத் தலைவரின் அறைக்குள் நுழைந்து கால்சட்டைப் பையிலிருந்து ஒரு கூர்மையான கத்தியை எடுக்கிறான்.

அதைப் பார்த்ததும் தலைவர் பதறியடித்து “செக்குயூரிட்டு எங்கய்யா போயித் தொலைஞ்ச”னு என்று கத்துகிறார். தலைவரின் அறையை ஏற்கனவே உள்ளே நுழையும் போதே தாளிட்டு வந்ததால் தலைவரின் கூச்சல் வேளியே கேட்கவில்லை. பாதுகாவலரும் காவல் நிலையத்துக்கு செல்பேசி வழி தகவல் சொல்லிவிட்டார்.

தலைவர்:: டேய் யாருடா நீ? எதுக்குடா கத்தியா எடுத்து எம் மூஞ்சிக்கு நேராக் காட்டற>
#############
தலைவரே நீங்க என்னை உங்க கட்சில சேத்து ஏதாவது பதவி கொடுப்பிங்களா மாட்டீங்களா?

@@@@@@@@@@@@@@@@

யாருடா நீ?

@@@@@@@@@@@@@@@

நான் தென்மாட்டம் ஒண்ணிலிருந்து வர்றேன். நான் இந்த மூணு வருசமா பெரிய ரடியா வளர்ந்திட்டேன். என் மேலே பல குற்ற வழக்குகள் நிலுவையில இருக்குது. காவல் துறைக்கு டிமிக்கி குடுத்துட்டு உங்கள நேரில பாத்து கட்சில சேர மாற்வேசத்தில வேசத்தில வந்திருக்கிறேன்.

@@@@@@@@@@@@@@@@@

ஏண்டா உனக்கு எழுதப் படிக்கத் தெரியாதா? நாங்க கடந்த ஆறு மாசமா ரவுடிங்களுக்கு முன்னுரிமை குட்டுத்து அவுங்கல கட்சில சேர்க்கற விசயம் பத்தி உனக்குத் தெரியாதா?

@@@@@@@@@@@@

தலைவரே, நான் அஞ்சாம் வகுப்பு வரை படிச்சிருக்கிறேன். ஆரம்ப் பள்ள்ளி நாட்களில் இருந்தே ரவுட்டித்தனம், திருடறது எல்லம் கத்துகிட்டேன. எங்க தாத்தா காலத்திலிருந்தே எங்க குடும்பத் தொழில் ரவுடித்தனம் தான். எங்க தாத்தா, என் அப்பா எல்லாம் என்க்வுண்டர்ல செத்துட்டாங்க. நான் இதுவரைக்கும் காவலர் கண்ணிலே மண்ணைத் தூவிட்டுத் தப்பிச்சு வந்திருக்கிறேன். உங்க ஆதரவைத் தேடித்தான்.

@@@@@@@@@@

உம் பேரு என்னடா>


@@@@@@@@@@@@@

எம் பேரு கத்திகுத்து கனகாம்பரம்.

@@@@@@@@@@@

அதுதான் உள்ளே கத்திய்யோட வந்தயா? அட முட்டாளே. நீ நம்ம அலுவலக பாதுகாவலர்கிட்ட “ நான் ரவுடி, கட்சில சேர வ்ந்திருக்கேனு சொல்லிய்ருந்தா உன்னை கவுரமே அவரே எங்கிட்ட உன்னை அழைச்சிட்டு வந்திருப்பாரே. சரி, ஸ்ரீ. டேய் சுந்தரேசா. இந்தக் கத்திகுத்து கனகாம்பரத்துகிட்ட உறுப்பினர் அட்டையைக் கொடுத்து, அவனைப் ஃப் போட்டோ எடுத்து அட்டையில ஒட்டி கையொப்பம் வாங்கிட்டு அவனை நம்ம் தலமை நிலையப் பாதுகாப்பு படிஅயில சேத்த்ரு. பின்னடி இருக்கும் பாதுகாப்புப் படை குடியிருப்பில அவனுக்கு ஒரு வீடு ஒத்துக்கி சாவிஅயை அவன் கையில குடுத்திடு.

@@@@@@@@

சரிங்க அய்யா.

@@@@@@@@@@@

(அப்போது காவல் ஆய்வாளர் தலைவர் அலுவத்திற்குள் வருகிறார்)
வாங்க பெத்துராஜ். நல்லா இருக்கிறீங்களா?

@@@@@@@@@@@@@@

நல்லா இருக்கிறங்க ஐயா.

@@@@@@@@@@@@
என்ன திடீர்னு இங்க வந்திருக்கறீங்க?

@@@@@@@@@@@@@@@@@

உங்க பாதுகாவலர் போன் பண்ணி தகவலச் சொல்லி வரச்சொன்னரு. அவரைத் தள்ளிவிட்டுட்டு உங்க அறைக்கு ஓடி வந்தவனைப் பற்றி விசாரித்துக் கைது பண்ணத்தான் வந்தேன். தேர்தல் நெருங்குது தலைவர்களுக்கும் கட்சி அலுவலகங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பது எங்க கடமை. அதுதான் வந்தங்க. உங்க தலைமை நிலைய வரவேற்பு அறையில இரண்டு காவலர்கள் பாதுகாப்பு பணில இருப்பாங்க. நல்லதுனக் அய்யா. நான் வற்ர்ரெனுங்க.

@@@@@@@
போயிட்டு வாங்க. .

எழுதியவர் : செல்வம் (21-Feb-21, 10:46 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 89

மேலே