கண்ணீர் வற்றியது

நேரிசை வெண்பா


தீராத காமனோய் ஈந்ததென் மைவிழிகள்
வாராவென் காதலனால் துன்பமே --.பாரா
முகமா யிருக்க அழுதழுது கண்ணீர்
புகரென நின்ற சதிகுறள். 4 / 10

விழிகள் காதலனைக் கண்டது குற்றமாம். அக்குற்றத்திற்காக
அவன் பிரிவால் அழுதழுது கண்ணீரும் வற்றிச் சதி செய்கிறது

........

எழுதியவர் : பழனிராஜன் (22-Feb-21, 8:02 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 47

மேலே