விடியும் வரை விலகாதே

அங்கேயே இரு..

இன்னும் கொஞ்சம்
சோறூட்டி  விடுகிறேன்
இடுப்பிலிருக்கும்
என் குட்டி நிலாவுக்கு

அதுவரை..
அங்கேயே இரு

விளக்கில்லா
குடிசைக்கு
விடிவிளக்கு
நீதான்..

விடியும் வரை
விலகாதே
அங்கேயே இரு

கணவனில்லா
வாழக்கையோடு
கனவுகளையும்
தொலைத்து நிற்கும்
இந்த
அபலைக்குத் துணையாய்
இரு..இரு..
அப்படியே
காவலிரு..

விலகாதே
வெண்ணிலவே
விடியும் வரை
விலகாதே..

எழுதியவர் : ராஜசேகரன் (22-Feb-21, 8:03 am)
சேர்த்தது : இராசசேகரன்
பார்வை : 230

மேலே