கூற்று

பூக்கும் ஓசை
காதை கிழித்தது
கோதை பேச்சருகில் !

குயில் குரல்
ஓங்கி ஒலிக்கிறது
மங்கை மொழியழகில் !

அழகில் பயப்படும்
வியாதி பயப்படுகிறது
உன்னை கண்டமையில் !

தென்றல் காற்று
திகட்டிப் போகிறது
உன் அன்புத் தென்றலருகில் !

ரோஜா இதழ்
கலையிழந்து வாடுகிறது
உன் உதட்டுப் பார்வையில் !

பாகற்காய்க் கூட்டம்
தேனிக்கனியாய் இனிக்கிறது
உன் காதல் சிமிட்டலருகில் !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சி (23-Feb-21, 12:37 pm)
Tanglish : kootru
பார்வை : 22

மேலே