எத்தனை பேர்

கனவில் கண்டு
ரசித்த பேர்களோ ?

கண்ணில் கைது
செய்த பேர்களோ ?

தெருவோர தேவதை
களின் பேர்களோ ?

மர நிழலில்
காத்திருந்த பேர்களோ ?

குளிர் அறை சிறை
பணியாளர் பேர்களோ ?

புரியாத புதிர் புதை மணல்
சங்கம மணற்புயல் பேர்களோ ?

பயணத்தில் உடனிருந்த
சந்தன பேரிழ பேர்களோ ?

ஒற்றை மணக்க காதல்
கடல் அலை பேர்களோ ?

புல்லாங்குழல் பேச்சு குணம்
கொண்ட பேர்களோ ?

என்னை மனிதனாய் மதித்து
காதல் ரசம் பொங்கிய பேர்களோ ?

மாற்றம் தரவில்லை
உந்தன் நினைவு
மரபணு மாற்றம் செய்து மயக்குகிறது ?

எழுதியவர் : வேல்முருகானந்தன் சி (23-Feb-21, 12:45 pm)
Tanglish : ethtnai per
பார்வை : 39

மேலே