புதிய ஆட்சி 2021

புதிய ஆட்சி 2021
என்னும் திரைப்படம்
விரைவில் ...!!

நடிகர்கள் , நடிகைகள்
அரிதாரம் பூசி ..
வசனங்களை பேசி
ரசிகர்களின்
ஆதரவை நாடி
பட்டி தொட்டி எல்லாம்
கூட்டங்கள் போட்டு ..!!

மக்களின் முன்னேற்றமே
எங்களின் குறிக்கோள்
என்று சொல்லி ...
நமது வாக்குகளை
குறிவைத்து வருகிறார்கள்

மக்களே ...உஷார் ...
நமது "ஒரு விரல் புரட்சி"
என்பது நல்லவர்களை
நோக்கி இருக்கட்டும் ..!!

தேர்ந்தெடுக்கப் பட்டவன்
அயோக்கியன் என்றால்
தேர்ந்தெடுத்தவன்
முட்டாள் என்பது போல்..!!

நமது விரலே
நம் கண்களை குத்தி
குருடாக்கி விடும்..!!
---கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Feb-21, 5:35 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 138

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே