வா மழையே வா வா

தாவரங்கள்
தலையாட்டி வா!வா!!
என்றழைக்க

பூமி
புன்னகைத்து கூப்பிட

மேகங்கள்
மயக்கத்தில் பின்னி விளையாட

மழை
புத்துணர்ச்சியில் பூமியில்
துள்ளி குதித்து விளையாட

சிறார்கள்
தண்ணீரில் போடும் ஆட்டம்க்கண்டு

தவளைகள்
சந்தோசத்தில் ஆறவாரமிட

மின்னல்
ஒலியெழுப்பி அலங்கரிக்க

இடி
பின்னனி இசையை இசைத்திட

வானவில்
வட்டமிட்டு காட்சியைப்படம் பிடிக்க

பூலோகமே
ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டத்தில் இருக்க

சிலருக்கு
மட்டும் தடை உத்தரவு

சூரியன்
சந்திரன் நட்சத்திரங்களுக்கு
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தடை

இது
சற்று ஏமாற்றம்

.....துரைராஜ் ஜுவிதா.....

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (23-Feb-21, 8:19 pm)
பார்வை : 63

மேலே