கருமையான இடத்தில்

இறக்கலாம் என்றே நாடுகிறது மனம்
எவர் பேசினாலும் என்னை நிந்திப்பதாய்
என்னவோ ஒரு எண்ணம் எப்போதும் எதிராய்
கருமையான இடத்தில் கால்கடுக்க நிற்பதாய்
காணும் யாவரும் ஏளனமாய் பார்ப்பதாய்
மனத்தை மாற்ற பல நிலையில் பயிற்சித்தாலும்
மறுக்கிறது மாசுப்பட்ட ஆழ்நிலை பேய் மனம்
தன்னையே கொல்லத் துணிகிறது பூதமாய் உயர்ந்து
கோபம் என்ற நஞ்சு கம்பீர கோபுரமாய்
தனிமையில் அமர்ந்து யோசித்தால் தறுதலையாய்
தண்ணீரில் மூழ்கி குளிக்கும் போது சிறிது அமைதி
தரையில் நடக்கும் போதே எங்கோ பறப்பதாய்
உணவைக் கூட வெறுப்போடே உண்ணும் நிலை
தனியாய் நடக்கும் போது பேருந்தில் அடிப்பட்ட நாய்
துடித்து கதறும் போது தோன்றியது உயிரின் வலி
மலையே என்மீது விழுந்தாலும் மரணிக்கமாட்டேன்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Feb-21, 10:45 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 45

மேலே