மனதால் அவன்

படிப்புக்கு நன்கொடை என்று எப்போது பழக்கமாச்சோ
அடிப்படை தர்மம் அன்றே அகிலத்தில் விலகலாச்சு
மண்ணை விற்றே மனித இனம் தின்னும் என்றே
பல இடங்களில் மலை ஆக்கினான் இறைவன்
மலையை மழித்து காசுக்காக விற்பான் மனிதனென்று
மனதால் அவன் நினைத்திருந்தால் அழித்திருப்பான்
நீரை யாரும் பதுக்க முடியாது என்றே அதனை
ஆவியாகும் வகையில் அகிலத்தில் புகுத்தி வைத்தான்
அதையே மாசுவாக்கி மாசுநீக்கம் செய்யும் மனிதனின்
மதியைப் பார்த்து மயங்கிய இறைவன் எழவே இல்லை
காற்றில் நச்சுக்.கலவையைப் புகுத்த நவீன இயந்திரம்
படைப்பதைப் பார்த்து இறைவன் பதைபதைப்பாகவே
ஆகாயம் வெகு தூரத்தில் உள்ளதாலே அதனை கூறிட
அற்பமனிதன் முயலவில்லையோ என அவன் நினைக்க
அது அழிய எவ்வளவு நாள் ஆகுமோ இறைவா.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Feb-21, 8:59 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : manathal avan
பார்வை : 40

மேலே