நான் சொல்ல இயலா கனவு அவன்💓

__கண்மணி__யின் பாவையதும் காதல் கொள்ளும்

கண்ணன் அவன் நோக்கயிலே

மின்மினியாய் எனது உள்ளம் படபடக்கும்

மின்னொளி தான் வீசயிலே

சின்ன சின்ன ஏக்கம் ஒன்றே போதும்

சிந்தனையில் உனது முகம் போதும்

கடைக்கண் பார்வை அது போதும்-உன்

கரம் பற்றும் காதல் ஓன்றே போதும்

கனவதனை பார்வையிடு போதும்-என்

கனவதிலும் நீ ஒன்றே போதும்-என்

காலமெலாம் உன் நினைவே போதும்-உன்

கால் தடங்கள் நான் தொடர்வேன் நாளும்

கோடி தனை நினைத்ததில்லை நானும்-உன்

குடிசை தனில் குடியிருப்பு போதும்

தேடி வரும் செல்வம் தேவையில்லை-உனை

நாடி நிற்கும் நாணம் ஒன்றே போதும்

தேவை என்று எதுவும் தோன்ற வில்லை-உனை

தேடும் இந்த கண்கள் இரண்டே போதும்...

பாதை தனை பார்த்திருப்பேன் நானும்-உன்

சீதையாக காத்திருப்பேன் நாளும் ❤...

எழுதியவர் : சுவாதி குணசேகரன் (24-Feb-21, 5:35 pm)
சேர்த்தது : சுவாதிகுணசேகரன்
பார்வை : 318

மேலே