ஐக்கூ கவிதை

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

விதவிதமான பூக்கள்

பூத்து குலுங்கியது

விதவை வீட்டுச் செடியில்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

விளை நிலங்களில்

அமோகமாக விளைந்திருக்கிறது

கட்டிடங்கள்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பெண்களுக்கு உரிமையளித்தது

திரைப்படங்கள்

ஆடை குறைப்பதற்கு

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

கிராமங்களில்

வசதிகளுடன் இருக்கிறது

கோவில்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நாள்தோறும் திருட்டு

கண்டு பிடித்தனர்

வேலையின்மை


*கவிதை ரசிகன்*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

எழுதியவர் : கவிதை ரசிகன் (24-Feb-21, 9:15 pm)
பார்வை : 157

மேலே