தமிழே அமிழ்தம்

தமிழும் அமிழ்தம்



ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்பக் குறள் வெண்பா

தமிழர்க் கெனவே அமிழ்து மொழியை
தமிழ்முருகன் செய்த மொழி



நேரிசை ஆசிரியப்பாக்கள்


தமிழென் றதேதடா தரணி மீதிலே
தமிழறேன் றதாரடா தரணி மீதிலே
தமிழைத் தந்த தாரடா தம்பி
தமிழ்தந் தமுரு கனெங்குக் கூறடா
தமிழ்ப்ப டைத்த தகத்தியன்
தமிழை ஜிபெரி யேல்தந் ததில்லையே



தமிழும் சைவரின் மொழியிதை அறிந்திடு
தமிழும் வைணவர் மொழியிதை அறிந்திடு
தமிழைப் பிறன்கொண் டாடிடல் முறையோ
தமிழை இஸ்ரேல் யேற்றி டாது
தமிழை மெக்கா புகழு மாசொல்
தமிழர் கடவுள் முருகன் தானடா
தமிழாநீ தமிழர்கே பிறந்தாய்
தமிழாநீ ஐரோப் பியர்க்கா பிறந்தனை

முருகு சைவம் வணங்கிடப் புரியாநீ
அருந்தமிழ் உரிமை கோரல் யேனாம்
முருகொ துக்கித் தமிழ்கேட் பதேனாம்
மூடா கொண்டது விடா முதலையே
தமிழைக் கண்ட அகத்தியன் அறியாய்
அகத்தியம் உண்டென அறியா நீயும்
பக்தியி லாத்தமிழ் வளருமா
சக்கைத் தமிழ்வைத் தெதை ச்செய் வாயோநீ



......

எழுதியவர் : பழனிராஜன் (27-Feb-21, 9:59 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1580

மேலே