குலமகள்

நேரிசை வெண்பாக்கள்

காலை எழுந்து கொழுநன் வணங்குவள்
காலைக் கடனை முடித்திடுவள் -- வேலையென
வீட்டை பெருக்கித் தெளிப்பள் முற்றத்தில்
மாட்டுப் பசுஞ்சாணம் பின்

வாசலில் கோலமிட்டு தீபமேற்றி லட்சுமி
வாசஞ்செய் யச்செய்வாள் நல்லப்பெண் -- நேசமாய்
பாசமுடன் பிள்ளைக் கடன்முடிப்பள் அட்டிலிலும்
வேசறவி லாவாச வூண்

அதுவந்த காலம் இதுகலி காலம்
எதுவெனினும் ஆண்நிகர் பெண்ணாம் -- பொதுவாம்
எதுவும் சரியாய் எதிலும் நிகராம்
ஒதுக்கு விழுக்காடென் றார்

பாலுக்காள் சாமான் விளக்க ஒராளாம்பார்
நாலும் சமைக்கத் தனியாள் -- கொலுவென
வீட்டையும் கூட்டிப் பெருக்கத் தனியாளாம்
மோட்டலுண வைத்தின்பா ராம்........

எழுதியவர் : பழனிராஜன் (2-Mar-21, 10:33 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 125

மேலே