இடை கொண்ட பேரழகே

கண்டேன் உன்னை கல் சிலை போலே
கண்ட நாள் முதல் கண்மூடவில்லை
நெஞ்சத்தில் பளு யானை எடைபோலே
வஞ்சி நீ வந்தால் பஞ்சாகும் நிலை
கருங்குயிலும் கூட பேடோடே இணைந்தே
காதல் கீதம் பாடி ஆசையைத் தூண்ட
கந்தர்வ பெண்ணே காந்தமென வந்து
காதல் கொண்ட என்னை கவர்ந்து செல்லடி
மார்கழி அடர்பனியும் அனலாய் இருக்க
மனமெல்லாம் உன் நினைப்பால் நிறைந்ததடி
கொடி சுற்றும் .இடை கொண்ட பேரழகே
கொஞ்சி உன்னை அணைக்கும் ஆசையிலே
நீரின் மேல் படுத்துக் கொண்டே மிதக்கிறேனே
நீள்விழி கண்ணுடைய மரகத மயிலே
நிறைந்த இன்பம் பெற்றிடுவோம் வாடி அருகில்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Mar-21, 10:35 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 165

மேலே