கற்பித்தாரில்லை

கற்பித்தாரில்லை

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா

ஈன்றவென் தாயோ படிக்கா பேதை
சார்ந்த தந்தை மூன்றாம் வகுப்பு
அதுவும் பின்னர் இரவுப் பள்ளி
பிறந்த நானோ படிப்பில் கெட்டி
பள்ளிப் போகுமுன் அரிச்சு வடியும்
கேட்ரேட் மேட்டென் றும்நான் படித்தேன்
இருசொல் மூன்று சொல்லில் வாக்கியம்
வந்த பையன் வாரா மாடு
வட்டப் பாறை பூலாக் கோல்
என்று மனனம் செய்தேன்
என்னைப் பள்ளியில் சேர்க்க படித்தேனே

நேரிசை ஆசிரியப் பாக்கள்

ஆறாம் வகுப்பில் ஆங்கிலம் சொன்னார்
பாடம் எல்லாம் தமிழில் கற்றோம்
தமிழுக் கென்று தனியாய் வகுப்பு
ஏனோ எனக்குத் தெரியா வாத்தியார்
பாப்பா னைக்கிண் லடித்து சிரிப்பார்.
இதுதான் தமிழா சிரியர் வேலை
இதொரு பக்கம் இருக்க பள்ளியில்
லூக்கா மார்க்கு கிறித்வர் படிக்கும்
நூலை படிக்க செய்தார்
எனது மதத்தை கற்பித் தாரிலையே

சுதந்திரம் பெற்றது ஏனோ யாரும்
அதைச்சொன் னாரிலை செய்தா ரில்லை
நாட்டில் அந்நிய ரால்பறி போன
கலாச்சா ரம்திரும் பியதா இல்லையே
அலட்சியம் செய்தார் ஆட்சி செய்தோர்
எங்கும் கிருத்துவப் பள்ளி அடிமையாய்
இந்துக்கள் தாழ்ந்தார் அன்றே
கிருத்துவ சமயம் உயர்ந்து போனதன்றே

படித்த தமிழர் சைவம் வைணவம்
தாழ்த்திப் பேச சமயம் தாழ்ந்தது
இந்துயார் வைத்த பேரென் கிறானே
முட்டா ளுக்கு இதுவா தந்திரம்
பொய்யன் திராவிடன் சாதி கடவுள்
இந்து திராவிடம் பாப்பான் சங்கம்
இதைவைத் தைம்பதாண் டையோட் டியவன்
தமிழரின் கடவுள் வணக்கம் மறந்தான்
தேவாரம் திருவச கம்திருப் புகழும்
தேடிப் படிக்காப் போனா னிங்கே
தமிழ்கற் காத்தமிழ் வாத்தி மாரும்
சாதி யில்லை என்பதை கற்றார்
சாதி பற்றி விவாதிப் பான்பார்
தமிழைக் கற்கா தவனே
பாவி விட்டான் கலாச்சா ரத்தையே......

எழுதியவர் : பழனிராஜன் (2-Mar-21, 10:36 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே