குறு குறுப்பு

கலித்தாழிசை பா

மிகை நகை உயிருக்கு பகையாம்
வகை வகை மிகுஉணவும் அதுவாம்
பதை பதைப்பு இதயத்திற்கு கேடாம்
மத மதப்பு உழைப்பிற்கு எதிராம்
நச நசப்பு ஈரத்தின் தொடராம்
சல சலப்பு பெருங்கூட்டக் குவிவாம்
பட படப்பு பயத்தின் அதிர்வாம்
விறு விறுப்பு தெளிவின் நிலையாம்
குறு குறுப்பு குரும்பின் முதலாம்
பர பரப்பு நேரத்தின் நிகழ்வாம்
வள வளப்பு அறியாத அறிவாம்
கிறு கிறுப்பு தெளியாத பொருளாம்
கிடு கிடுப்பு பெரியவோசை ஒலியாம்
கட கடப்பு மகிழ்ச்சியின் உச்சமாம்
நெடு நெடுப்பு வளர்வின் உயர்வாம்
இவ்வார்த்தைகள் தமிழின் உரமாம்
இது போல் பற்பெருமை மிக்கவள் தமிழ் தாயாம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Mar-21, 10:43 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 57

மேலே