தனிமை

முதல் உயிர் தோழி அவள்
கடவுள் கொடுத்த இரண்டாவது வரமவள்

என்னை என்னோடு அதிகம் உரையாட வைப்பவள்
என் நசை நான் அறிய வைப்பவள்

எவரிடமும் சொல்ல இயலா காயங்களையும்
விவரிக்க இயலா வேதனையும்
அவளிடத்தில் ஆறுதல் பெறுகிறது
கண்ணீராய் கொட்டி தீர்த்த பின்பு

வார்த்தைகளாய் இருந்த உணர்வுகள் அனைத்தும்
கவிதையாய்  மாற்றம் அடைகிறதே
அவள் உடன் இருக்கையில்

குழப்பத்தில் உள்ள நான்
தெளிவுற அவள் தேவை
தெளிவான என்னை குழப்பும்
வித்தையும் அவளுக்கு நன்றாக தெரியும்

விரும்பியவர்கள் கொடுக்கும்போது மட்டுமே அவளை வெறுக்கிறேன்
மற்ற நேரங்களில் அவளை இறுக அனைக்கவே விரும்புகிறேன்.....

எழுதியவர் : தீபிகா. சி (3-Mar-21, 11:44 am)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : thanimai
பார்வை : 70

மேலே