வீதிக் கடைசியில் ஒரு வீடு

வீதிக் கடைசியில்
ஒரு வீடு
தினம் எத்தனை பேர்
வருகிறார்கள் போகிறார்கள்
இன்று அந்த வாசலில் நிசப்தம்
தினம் எத்தனை பேர் வந்தார்கள்
உருண்டார்கள் புரண்டார்கள்
இன்று அசைவற்றுக் கிடக்கிறாள்
தூக்கிச் செல்ல நாலுபேர் இல்லை

எழுதியவர் : கவின் சாரலன் (3-Mar-21, 3:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே