அறிவு தேவியே

எத்திக்கும் என்றென்றும்
எழில்மணவாசம் பரப்பும்
அறிவுத்தேவிக்கடலே! உன்
அகலாழ உயர நீள
தித்திக்கும் வாயில் முங்கியெடுத்த
தத்துவ முத்துக்ககளால்
தத்தம் மூளைக் களஞ்சியங்களை
தன்னிச்சையாய் நிரப்பிப் பெரிதாக்கி
'தத்துவஞானி' 'வேதாந்தி' என்று
தமையுயர்த்திடும் உத்தமப் பெயரீட்டி
அந்தத்தில் அகிலஉலகமெல்லாம்
ஆண்டுநடத்தும் நாயகனாம்
உலகறிவுகளுக்கெல்லாம் காரணராம்
உனைப்படைத்த ஆண்டவரை
சுத்தமாய் - 'இல்லை' - என்று
சாற்றிடும்போது - என்னுள்ளே
சத்தியனவன் உனைப்படைத்ததன்
சூட்சமக் காரணம்தான் யாதென்று
முத்தமிடுகின்றன கெள்விக்கணைகள்
மொத்த அங்கத்தில்!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (7-Mar-21, 2:38 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 44

மேலே