காலை

பொற்தலை
பொன்பால்முகம்
தீயுடல்
தீரவுடை
பொல்லார் நல்லோரேன்றிலாப்
பிள்ளைப்பளிங்கு இதயம்
பருவமாற்றத்தாய்க்குப்
பணியும் பனிமனம்
கர்வ எருக்கைக்
கருக்கும் கனல் சுவாசம்
கதிரோன் கண்திறந்தான்
கமலமனம் திறக்கவந்தான்

எழுதியவர் : அமல்.சி.தேவ் (8-Mar-21, 1:24 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 60

மேலே