நீல வண்ண கண்ணா வாடா - மங்கையர் திலகம்

சிவாஜி கணேசன் - பத்மினி நடித்து 1955 ல் வெளிவந்த மங்கையர் திலகம் திரைப்படத்தில் மருதகாசி பாடல் எழுதி, தக்ஷ்ணாமூர்த்தி இசையமப்பில் ரா.பாலசரஸ்வதி பாடிய ஓர் அருமையான பாடல் ‘நீல வண்ண கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா’

நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா (நீல வண்ண)

பிள்ளை இல்லாக் கலியும் தீர
வள்ளல் உந்தன் வடிவில் வந்தார் (பிள்ளை இல்லா)

எல்லையில்லா கருனை தன்னை
என்னெவென்று சொல்வேனப்பா

என்னெவென்று சொல்வேனப்பா (நீல வண்ண)

வானம்பாடி கானம் கேட்டு
வசந்த கால தென்றல் காற்றில் (வானம்பாடி கானம்)

தேன் மலர்கள் சிரிக்கும் மாட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி (நீல வண்ண)

1.தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம் ஆ ... ஆ ... ஆஆ .... ஆ

தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்
கண்ணால் உன்னை கண்டால் போதும்
கவலை எல்லாம் பறந்தே போகும் (கண்ணால் உன்னை)

சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி (சின்னஞ்சிறு)
பொன்னால் ஆன நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு (நீல வண்ண)

நடுங்க செய்யும் வாடை காற்றே
நியாயமல்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளை போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்த்ரன் ஏது
அம்மா என்ன புதுமை ஈது
என்றே கேட்கும் மதியை பாரு

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே
இணையில்லா செல்வம் நீயே
பொங்கும் அன்பின் ஜோதி நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே (நீல வண்ண)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Mar-21, 8:12 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 116

மேலே