மங்கையர் தினம்

மங்கையராய் பிறப்பதற்கே
நல்ல மாதவம் செய்திடல்
வேண்டுமம்மா ....
என்றார் கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை..!!
உண்மைதான்

பெண் என்பவள்
குடும்பத்தின் "ஒளிவிளக்கு"

பெண் என்பவள்
அன்பின் முகவரி

பெண் என்பவள்
ஆழ்கடல் போல்
அமைதியானவள்..!!

பெண் என்பவள்
வாழ்க்கை படகை
தடம் மாறாமல்
ஓட்டி செல்லும்
வழிகாட்டி ...!!

பெண்ணின் பெருமைகளை
இப்படியாக பெருமையாக
சொல்லிக் கொண்டே
இருக்கலாம் ..!!

அரிது அரிது மானிடராய்
பிறத்தல் அரிது
அதனினும் அரிது
மாதராய் பிறப்பது..!!

மாதராய் மண்ணில் பிறக்க
உண்மையில் மாதவம்
செய்திருக்கும் மங்கையர்கள்
அனைவருக்கும் இனிய
மகளிர் தின வாழ்த்துக்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Mar-21, 10:29 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mangaiyar thinam
பார்வை : 234

மேலே