நீயின்றி உலகில்லை

சிறகில்லா பறவையாய்
வானுயர சென்றவள்
துயரங்கள் பல கடந்தும்
கோபுரமாய் நின்றவள்
தாயாகி சேயாகி
தோழியாகி பின் யாதுமாகி
தாரமாய் வந்தவளை
வாழ்த்தி வணங்க வேண்டாம்
வீழ்த்தாமல் இருங்கள்
விதையாய் விளைவோம்

எழுதியவர் : விஜி விஜயன் (8-Mar-21, 1:50 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
பார்வை : 145

மேலே