என் இனிய தனிமையே💥

என் இனிய
தனிமையே
உன்னை காதலியாய்
கட்டி அணைக்க
முயல்கின்றேன்
விலகி,விலகி ஓடுகிறாய்
உன்னை பல காலம்
உதாசினப்படுதினேன்
உதறி தள்ளினேன்
உண்மை தான்
ஆளாய் பறந்து
ஆர்பரித்த கூட்டம்
அடங்கிவிட
தேன் சொட்ட
பேசி வந்த சொந்தமும்
பந்தமும்
பழுந்த இலை என்னை
புறம் தள்ள
தள்ளாத வயதில்
ஞானோதயம்
தள்ளி வைத்த என்னை
தனிமை ஆட்கொள்ளுமா
தனிமை என்னை மீட்டெடுக்குமா
தந்துவிட்டேன் என்னை உன்னிடம்
தற்காத்து விடு என்னை
இது சுயநலம் அன்று
சுயபரிசோதனை
பகட்டுக்கு விலை போன நான்
பச்சை நொட்டுக்கு ஆசை பட்ட நான்
பாசாங்கு பல செய்த நான்
பக்தி நாடகம் பல போட்ட வேடதாரி நான்
பரபஞ்சத்தின் உண்மை அறியா பாவி நான்
பஞ்சனையில் பல நெஞ்சங்கள் மீது முகம் புதைத்த நான்
பாவ, புண்ணியம் அறிய மானிட பதர் நான்
காலத்தின் கட்டளை
கண் கெட்ட பின்பு சூரிய நகஸ்காரம்
பிறவி குணம் பாடாய்படுத்தினாலும்
தனிமையே
தஞ்சம் அடைந்தேன் உன்னிடம்
உன்னிடம் இரண்டே வேண்டுகோள்
பிறந்த குழந்தையாக மாற துடிக்கிறேன்
மீண்டும் அன்னையின் கருவறைக்குள்
செல்ல முயற்சிக்கிறேன்.
- பாலு.

எழுதியவர் : பாலு (9-Mar-21, 3:58 pm)
சேர்த்தது : balu
பார்வை : 96

மேலே