பூண் எது

மானழுதக் கண்ணீர் மழையில் குளித்தபடி
தேனொழுகத் தின்றதனைத் தீர்த்துவிடும் – கானகத்தின்
வேங்கை மரிக்குமோர்நாள் வெட்டியதன் கால்நகத்தைப்
பூங்கழுத்தில் மாட்டுவதோ பூண்,?

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Mar-21, 1:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 49

மேலே