நல்லதையே நாடுவதை இளைஞனே

பாடம் கற்கத்தான் பளிச் செல்கிறான்
என்று அவன் தாய் நினைக்க
அவனோ கற்றுவந்தது இளமையில் காதல்
என்றறிந்தாள் அவன்பேதைத் தாய் பாவம்
அவன் கேட்பதெல்லாம் வாங்கித் தந்தாள்
அதற்காக இங்கும் அங்குமாய் ஓடி உழைத்து
அவனோ அவள் வாங்கித் தந்த
'மொபைல் -போனில்'' காதலை'
வளர்த்துவந்தான்
'அர்த்தம் புரியாது ' இப்படி இளவயதில்
செய்யும் செயல்கள் வாழ்க்கையை பெரிதும்
பாதிக்கும் .... இதை அறிந்து பண்புடன்
வாழ்ந்திட வேண்டும் இளைஞர்களே ....
' ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது '
நல்லதையே கேள், நல்லதையே கூறு நல்லதையே
செயல் படுத்தக் கற்றுக்கொள் .....
நல்லவையே உன்னை நாடி வரும்
'அவன்' அருளால்.... உன்னை வாழவைக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Mar-21, 9:44 am)
பார்வை : 52

மேலே