நிகழ் காலமே உன் கையில்

கடந்த காலத்தை
நினைத்து நினைத்து
வருத்தம் கொள்வதில்
பயனில்லை ..
அது உன் கையை விட்டு
கடந்து விட்டது...!!

வரும் எதிர்காலம்
உன் கையில் இல்லை
அதையும்
நினைத்து நினைத்து
ஏக்கம் கொள்ளாதே...!!!

நிழல் போல் உன்னை
தொடரும் நிகழ்காலமே
தற்சமயம் உன் கையில்..!!

இந்த நிகழ்காலத்தை
யாருக்காகவும்
விட்டு கொடுக்காமல்
எதற்காகவும் சமரசம்
செய்து கொள்ளாமல்
வாழ்ந்து விடு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Mar-21, 1:08 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 123

மேலே