பழைய சோறு

ஐந்து நட்சத்திர 'ஹோட்டல்' அது
என்னருகில் இருந்த மேஜையில்
வந்தமர்ந்த 'அமெரிக்கா' பயணி ,
தனது காலை 'சிற்றுண்டிக்கு' கேட்டது
'பழைய சாதம்' 'ஆரஞ்சு ஜூஸ்' ...!!!!
பார்த்து கொண்டே இருந்தேன்.....
அவர் கேட்ட 'பாளைய சாதம்' வந்தது
ஒரு அழகிய செட்டிப் பானையில்,
'சைடு-டிஷ்' சிறு கிண்ணத்தில் 'புளி மிளகாய்;
இரண்டு மூன்று சிறு வெங்காயம்
ஒரு நீண்ட ' துண்டாக்கப்பட்ட பச்சை மிளகாய்!

பார்த்துக் கொண்டே இருக்கையில்
வெள்ளைக்கார பயணி பானை சோற்றை
பருக்கைக் கூட மீற்றாது சைடு-டிஷுடன்'
முடித்து விட்டு.... ஜூஸ் பருகி ....
வெளியே செல்ல தயார் நிலையில்...
அவர் முகத்தில் மகிழ்ச்சி.....
பழைய சோறின் குளிச்சியைத் தாங்கி...

நான்.... இன்னும் என் ஆர்டருக்கு காத்திருந்தேன்
'பிரெட் டோஸ்ட்... காபி......

பழைய சோறு.....பைவ் ஸ்டார் ஹோட்டலில்!

பழையன புகுதலும்.... காலச்சுழல்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Mar-21, 2:04 pm)
Tanglish : pazhaiya soru
பார்வை : 55

மேலே