செட்டு வடை தட்டு பலகடை - அடிமறி மண்டில ஆசிரியப்பா

உலகிலே முதலின் தோற்றமே சிவமே
உயிர்கள் உண்மையின் உணர்வுமே சிவமே
உணர்ந்தோர் போற்றியே துதிப்பதும் சிவமே
உண்மையில் யாவும் இருப்பதும் சிவனாய்.

மதமுமே மனதையும் இதமாய் இளக்குமே
இளகிய மனதினால் எதுவும் நிகழுமே
நிகழும் விளைவுகள் அமைதியை கொடுக்குமே
கொடுத்தல் என்பது சிறந்த குணமே.

படிப்பின் வழியது அறிவின் முதிர்வு
அனுபவம் என்பதோ படிப்பில் சிறந்தது
நட்பால் நன்மையும் தீமையும் வரலாம்
உழைப்பால் ஊதியம் பெறுவதே பெருமை

செட்டு வடை தட்டு பலகடை
முழுதும் வாங்கினால் உனக்கு ஒருவடை
எண்ணையில் உளுந்தால் பருப்பால் சுட்டவடை
பசிக்கையில் கடித்தால் குறையுமே பசியே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Mar-21, 6:50 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 30

மேலே