கரும்பு வெட்ட ஒரு நாளைக்கு

முகச்சவரம் செய்யக் கூலி ஐம்பது
முடியை வெட்டிவிடக் கூலி நூற்றைம்பது
சேலையைத் துவைத்தரக் கூலி எழுபது
சட்டையை சூடு பெட்டியால் தேய்க்கக்கூலி பத்து
இறப்பில் பறைச்சாற்ற ஒரு நாளைக்கு கூலி ஆறு நூறு
மூன்று மணி நேரம் களைப்பிடுங்க கூலி முந்நூறு
தமுக்கு அடிக்கும் நபருக்கு மணிக்கு நூற்றைம்பது
கரும்பு வெட்ட ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஏழு நூறு
கதிர் அறுக்க இயந்திரத்திற்கு மணிக்கு இரண்டாயிரம்
நடவு நட இயந்திரத்திற்கு காணிக்கு மூன்றாயிரம்
கேழ்வரகு கூழ் ஒரு சொம்பின் விலை இருபத்தைந்து
கீரை வகைகளின் ஒரு கட்டு விலை இருபது
கொத்தனாரின் ஒரு நாளையக் கூலி தொள்ளாயிரம்
சித்தாளின் கூலியும் ஒரு நாளைக்கு ஐந்நூறு - என
அன்றாடம் உழைப்போரின் கூலிகள் அற்புதமாய்
அடித்தட்டு மக்களின் வாங்கும் திறன் செழுமையாய்
வாகன எரிபொருள் தங்கம் மணல் குடிநீர் என
எவற்றின் விலை உயர்ந்தாலும் வாங்க திறனுண்டு
ஒவ்வொரு நாளும் கூலி பெறும் தொழிலாளிக்கே
ஒளி பொருந்தியதாய் மாறுகிறது நிகழும் காலங்கள்.
~~~~~~ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (17-Mar-21, 10:24 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 20

மேலே