அன்பு மகனே

அன்பிற்குரிய மகனே!!!
தமக்கையின் தவ புதல்வனே
தாயாகமல் தாய்மையை உணரவைத்தவன் நீயடா
கண் கலங்கி நிற்கும் காலங்கலையும்
நிலை குலைந்து நிற்கும் நேரங்களையும்
அழகாய் மறைத்தாய் உன்
அசட்டுதனமான  சிரிப்பினால்
உன்மீது கொண்ட அன்பினால்
ஓராயிரம் வாக்குவாதம் உன் தாயிடத்தில்
எத்தனையோ மலழையரை நெஞ்சோடு அணைத்தாலும்
ஏனோ உன் ஸ்பரிசம்
இதுவரை உணராத ஒன்றை உணர்த்தியது
காலம் உள்ளவரை
உனக்கு இரண்டாம் தாயாக நான்
எனக்கு முதல் குழந்தையாக நீ

எழுதியவர் : தீபிகா. சி (17-Mar-21, 10:56 am)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : anbu makanae
பார்வை : 94

மேலே