ஆணும் பெண்ணும் விரும்பி

காம எண்ணத்துடன் தொந்தரவு செய்தவர்
அப்பெண்ணின் கையில் சகோதர கயிறுகட்டி
பிணையில் வர விண்ணப்பம் செய்யலாம்
மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மகா அறிவு பொருந்திய அற்புதத் தீர்ப்பு
இதேபோல் கொலை செய்தாலும் எந்தவொரு
ஆன்மீக தளத்திலாவது மன்னிப்பு கேட்டுவிட்டால்
தண்டனை இல்லையென்றும் தீர்ப்பும் வரலாம்

ஆடையோடுள்ள பெண்ணைக் காமத்தால் சீண்டினால்
அதுவொன்றும் பாலியல் தொந்தவு இல்லையென
ஆனந்த தீர்ப்பு வழங்கிய அற்புத நாட்டில்
அமைதியாய் வாழும் ஆற்றல் மனிதர்கள் நாம்

வாக்கு அளிப்பதென்பது மக்களின் கடமை
ஊழல் புரிவது அரசியல்வாதிகள் உரிமை
எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோருக்கு
எட்டாண்டுகள் சிறைவாசம் எனவும் தீர்ப்பு வரலாம்

தொலைகாட்சியில் இரு நிமிடத்திற்குள் விளம்பரம்
இடைவிடாது வருகிறது அதை ஒழுங்குப்படுத்த
நீதிமன்றத்தை நாடினால் அலைவரிசை மாற்றி
வேறு நிகழ்ச்சியை பார்க்கச் சொல்லுது நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விரும்பி புணர்ந்தபின்
பிரிய நேர்ந்தால் குற்றமில்லையென கூறிய மன்றம்
உணர்வும் உயிரும் தொடர்புடைய நிகழ்வுக்கு
ஒப்புக்கென தீர்ப்பு கூறுவது அரவத்தோடு ஆடுவதாம்.
÷÷÷÷÷÷÷÷ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-Mar-21, 11:34 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 38

மேலே